Sunday, August 19, 2018

தமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி!

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதியதில், 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பல உயிர் பலிகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் பல்வேறு பிழைகள் இருந்ததாக மாணவர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா எனக்கேள்வி எழுப்பியதோடு, சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரபிறப்பித்துள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக இது தமிழுக்கு கிடைத்த வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி என இணையவாசிகள் டுவிட் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment