சென்னை: ஒரு வயது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக போராடி வரும் இந்த கட்டுமான தொழில் புரிபவருக்கு உதவுங்கள். சாம்ராத் முதன் முதலாக இந்த உலகத்தில் பிறந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவனை கையில் ஏந்திய போது அவனின் அழகான பெரிய விழிகள் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கின்றன.
அவனின் பிஞ்சு விரலின் பரிசம் ஒவ்வொரு முறையும் நான் தந்தையாகியதை எனக்கு நினைவுபடுத்தி சென்றது. அந்த சந்தோஷமான தருணங்களை இப்பொழுது நினைத்தாலும் என் மனம் ஒரு தந்தையாக துள்ளிக் குதிக்கிறது என்று கூறுகிறார் சாம்ராத் தந்தை மனோஜ்.
ஆனால் இந்த சந்தோஷம் இப்பொழுது அவரிடம் இல்லை. தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். அவனின் இயல்பு வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மீட்டெடுத்து கொண்டே வந்தனர்.
ஆனால் துன்பம் அவர்களை விடுவதாக இல்லை. அடிக்கடி அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகத் தொடங்கியது. காய்ச்சல், குளிர் காய்ச்சல் என்று மாறி மாறி வரத் தொடங்கியது. பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அவனுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.
8 நாட்கள் மருத்துவமனையில் இருந்தே சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம். அவனது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறத் தொடங்கியது. ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் முன்னரே மறுபடியும் காய்ச்சலால் அவதிப்பட ஆரம்பித்தான். நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அந்த பரிசோதனையின் முடிவு எங்கள் வாழ்க்கையையே மாற்றி விட்டது. அவனுக்கு இதயத்தில் ஓட்டை (வெண்ட்ரிக்குலார் அசாதாரண குறைபாடு) ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். இதை கேட்டதும் என் மனைவி அங்கயே அழத் தொடங்கி விட்டாள். எங்களுக்கென்று துணையாக இருப்பது அவன் மட்டும் தான்.
அவனுடைய இதய அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்த பணத்தை திரட்ட என்னால் எவ்வளவு தூரம் கடன் வாங்க முடியுமோ அவ்வளவு தூரம் போராடி வருகின்றேன். நான் ஒரு கட்டுமானத் தொழில் புரிபவன். எனது தினசரி வருமானம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. அதுவும் சில நேரங்களில் வேலை கிடைத்தால் தான் இல்லையென்றால் அந்த வருமானமும் எனக்கு கிடைக்காது.
எனது மனைவி வேலைக்கு போகவில்லை . இப்பொழுது சாம்ராத் மருத்துவ செலவுக்கு கூட என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகனின் அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுள்ளேன். இன்னும் அறுவை சிகிச்சை செய்ய 3 லட்சம் வரை தேவைப்படுகிறது. பணம் கிடைக்காததால் இன்னும் என் குழந்தையை மருத்துவமனையில் கூட அனுமதிக்காமல் இருக்கிறோம். இப்பொழுது அவன் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருகிறான். ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையென்றால் அவன் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவனால் உட்காரக் கூட முடியவில்லை. படுத்த படுக்கையாகி சோர்ந்து போய் கிடக்கிறான். அவனால் இயல்பாக மூச்சு விட முடியவில்லை. அவன் விளையாண்டு வெகுநாட்கள் ஆகி விட்டது. எப்பொழுதும் துறுதுறுவென்று இருக்கும் அவனை இப்படி பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.
என் துயரத்தை போக்க உங்களால் முடியும். உங்களின் ஒவ்வொரு உதவிக் கரங்களும் என் மகனின் உயிரை காக்கும். என் குழந்தை பிறக்கும் போது இருந்த அந்த சந்தோஷத்தை எனக்கு திரும்ப கொடுக்க உதவி செய்யுங்கள். உங்களின் சிறு உதவி என் மகனின் வாழ்க்கையை காப்பாற்றும் மனிதாபிமானமாக இருக்கட்டும். ஒரு தந்தைக்கு கை கொடுங்கள் உங்களின் சிறு உதவி இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்ற உதவட்டும். கடவுளுடன் சேர்ந்து நாமும் உயிர் காப்போம். உயிர் காக்க உதவி செய்வோம்!

No comments:
Post a Comment